Arunprabhus's Blog

ஜூன் 5, 2010

இப்படியாக உலகம் !!

Filed under: உண்மை — குறிச்சொற்கள்: — arunprabhus @ 7:19 முப

வழவழ கொழகொழ சவசவ அரசியல்வாதிகளையும் போராட்டக்காரர்களையும் ரசிக்கும் அரசாங்கங்கள், நேர்மையுடன் போராடும் எந்த எழுச்சியாளர்களையும் ஏன் அங்கீகரிப்பதில்லை. அதுவும் அவர்கள் வாழும் காலத்தில் முடிந்த அளவு அவர்களை படுத்துகிறது.

வெள்ளையரின்  ‘Defence of India Act’ அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் குண்டு வீசும் போதும், கவனமாக திட்டமிட்டு எந்த உயிரிழப்பும் இல்லாமல் அதை செய்கிறார் பகத்சிங்.  ‘it takes a loud voice to make the deaf hear’ என துண்டு பிரசுரம் வீசி தன் செயலின் காரணத்தையும் சொல்லிவிட்டு போகிறார்.

ஆனால் ‘கலவரத்தை தவிர்க்க லாகூர் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கிலிடுங்கள் என ஆங்கிலயருக்கு ஆலோசனை தருகிறார்’ கரம்சந் காந்தி. ‘The government certainly had the right to hang these men’ என்று எழுதுகிறார் அந்த அகிம்சா மூர்த்தி.

முதல் ஒத்துழையாமை இயத்தின்  தீவிரத்தை குறைக்க ஏற்படுத்தபட்ட ‘காந்தி-எர்வின்’ சமரச ஒப்பந்தத்தில் பகத்சிங்கின் தூக்கு பற்றி எதுவும் குறிப்பிடாமல் அனைவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியது காங்கிரஸ் மற்றும் வெள்ளையர் அரசாங்கம். (சான்று : வீக்கி – http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh)

இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்று ஒலித்த பகத்சிங்கின் குரல்வளையை 23 வயதிற்குள் உலகம் நொருக்கிவிட்டது.

அதே போல் புரண சுதந்திரம் கேட்ட நேதாஜியை விட தங்கள்அரசாங்கத்திற்கு கீழ்படிந்த சுயாட்சி இந்தியா (  ‘domanian status’) கேட்ட காந்தியைத் தான் பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு பிடித்தது.   போகும் போது தங்கள் சவசவ அரசியல் நண்பன் காங்கிரஸ் கையில் நாட்டை ஓப்படைத்தது.

பணக்கார குடும்பத்தில் பிறந்து மருந்துவரான சேகுவாரா உலகத்தை பிடித்து ஆட்டிய Imperialism ஒழிய காடுகளிலும் மலைகளில் தரிந்து போராடியவர். அவரை பயங்கரவாதி என்ற அமெரிக்க அரசு மக்கள் செல்வாக்கில்லாத சர்வாதிகாரியான பட்டிஸ்டா (Batista) வை ஆதரித்தது.

பெற்ற அன்னைக்கும் கூடப்பிறந்த உறவுகளுக்கும் கூட எதையும் கொடுக்க விரும்பாத இந்த  சுயநல காலகட்டத்தில், தாங்கள் நேசித்த மண்ணிற்காக தங்களையே  தானம் செய்த தியாகச் சுடர்கள் புலிகள். அவர்கள் ஒவ்வொருவரும் பகத்சிங்காவும், நேதாஜியாகவும், சேகுவாராகவும் வாழ்ந்து மடிந்தவர்கள்.

தாங்கள் நம்பிய தனி ஈழ கொள்கையில் கொஞ்சமும் மாறாமலும் போராட்டத்தின் நேர்மை குறையாமலும் போராடியவர்கள் புலிகள்.

ஊருக்கு நடுவில் ஒளிந்து கொண்டு  கலவரம் செய்யமாட்டர்கள்.  ஊரையே கட்டியாண்டு  தாங்கள் நினைத்த தனிநாடு நடத்துவார்கள். பொதுமக்களுக்கு குண்டு வைத்து அரசியல் நடத்த மாட்டர்கள். தங்களையே குண்டாக்கி அரசியல் எதிரிகளோடு மோதுவார்கள். விமானத்தை கடத்தி பொது மக்களை கொல்ல மாட்டார்கள். துணிந்து இறங்கி ரானுவ விமானத்தளத்தையே பிரித்து மேய்வார்கள்.  மதத்தின் பின்னாலோ.. வல்லரசுகளின் பின்னாலோ ஒளிந்து கொண்டு போர் செய்ய மாட்டார்கள். தங்கள் இன விடுதலைக்காக பிறரை நம்பாமல் தங்களையே பணயம் வைத்து போராடுவார்கள்.

சமசரம் இல்லாத கொள்கை பிடிப்பையும், கொஞ்சமும் விலகாத இந்த நேர்மையையும் தான் உலகம் ரசிக்கவில்லை.

Create a free website or blog at WordPress.com.