Arunprabhus's Blog

பிப்ரவரி 12, 2011

காங்கிரஸ் பிறந்த கதை

Filed under: Uncategorized — arunprabhus @ 10:43 பிப

காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்கம்

** வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக்கிடந்ததை பொறுக்க முடியாத சில தேசபக்தி மிக்க இளைஞர்கள் ஒன்று கூடி காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினர் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.  ஆலன் ஆக்ட்டிவியன் ஹமே என்ற பிரிட்டிஷ் வெள்ளையரால் காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

** காங்கிரஸின் தந்தை எனப்படும் இந்த ஹமே யார் ? இந்தியாவின் முதல் சுதந்திர போர் எனப்படும் சிப்பாய் கலகத்தை பல ரானுவ நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்திய பிரிட்டிஷ் முன்னால் ரானுவ அதிகாரி இவர். 1884ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தியாசபிகல் சொசைட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஹமே, அங்கு தன் நண்பர்கள் 17 பேருடன் காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினார்.

**  முதல் உலகப்போரின் முடிவில் இங்கிலாந்து அரசாங்கம், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை பிரிட்டிஷ் ராஜ் என்ற ஒரு நிலையான அரசாக மாற்றியது . அரசாங்கம் எளிதாக இயங்க, பிரிட்டிஷ் மேலாதிகத்தை முழுதும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலம் தொிந்த சேவகர்கள், எழுத்தர்கள்,  வக்கீல்கள்,  பணக்காரர்கள் தேவையிருந்தது.  வெள்ளையர்களுக்கும் இவர்களுக்கும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும் ஒரு பொதுவான தளமாக காங்கிரஸ் விளங்கியது

காங்கிரஸ் மகாசபை தொடக்கம்

**1885 ஆண்டு இந்திய வைஸ்ராய் “லார்டு டுபாரின்” வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் சபை மும்பையில் கூட்டப்பட்டது.  வெள்ளையர்களும், ஆங்கிலம் படித்த இந்திய உயர்சாதி பார்சிகளும் பிராமணர்களுமாக 72 போ் கலந்து கொண்டனர்.  காங்கிரசை தொடங்கிய ஆலன் ஆக்ட்டிவியன் ஹமே பொதுச்செயலராக பதவியேற்றுக்கொண்டார்.  கல்கத்தா வெள்ளையர் நீதிமன்றித்தில் வழக்கறிஞராக இருந்த “உமேஷ் சந்திர பனர்ஜி” அவைத்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டார்.

**1885ம் ஆண்டு முதல் 1907 ஆண்டு வரை, ஒரு சடங்காக காங்கிரசு மகாசபை ஆண்டுக்கு ஒரு முறை கூடும். தங்களுக்குள் தலைவர் செயலர்களை தோ்ந்தெடுக்கும். காங்கிரஸில் இருந்த பணங்காரர்களுக்கு மேலும் சில பட்டங்களும் பதவிகளும் வேண்டி தீர்மானம் இயற்றும் . அல்லது சில தொழில் சலுகைகளையும் வரிக்குறைப்பையும் கேட்கும்.

** 1881ம் ஆண்டு சிப்பாய் கலகம் ஏற்படுத்திய விடுதலை வேட்கையை நீர்த்து போக வைக்க வெள்ளையர்களால் வஞ்சகமாக தொடங்கட்ட காங்கிரஸ், இந்த 20 ஆண்டுகளில் அந்த வேலையை கச்சிதமாக செய்தது.

Create a free website or blog at WordPress.com.